நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை அவர் வழங்கவில்லை. தொகையை விமல் பின்னர் காசோலையாக வழங்கியுள்ளார்.

இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.3 கோடி செக் மோசடி வழக்கை விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப் பட்டது. பைனான்சியர் தரப்பில் வக்கில் ஆர். வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கிறேன். வாங்கிய (செக்) தொகையை திருப்பித் தரவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவர் தரப்பில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.