சென்னை:

தமிழக காவல் துறையில் உள்ள 1.24 லட்சம் பணியிடங்களில் 1.04 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். காவல் துறையில் போலீசார் பணிகளை ஒருங்கிணைப்பதில் முழுமயை£ன தொழில்நுட்பம் இன்னும் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால் தினமும் பணியில் உள்ள போலீசார், தேவைப்படும் போலீசாரின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

அதோடு போலி அடையாள அட்டைகளுடன் பலர் போலீசார் என்ற போர்வையில் உலா வருகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ‘‘க்யூ ஆர்’’ கோடு தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாரின் புகைப்படம், உள்ளிட்ட விபரங்கள் டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

இவற்றை கொண்டு ‘‘க்யூ ஆர்’’ கோடு கொண்டு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு முன் அடையாள அட்டைகளை சம்மந்தபட்ட போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றி வந்தது. ஆனால், இப்போது அனைத்து போலீசாரின் விபரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.