சென்னை:

தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘‘2014ம் ஆண்டு தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் என்ன ஆனது?. பாஜக.வினர் தங்களை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை வரவில்லை. பட்ஜெட்டில் தமிழக மக்கள் நலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

அமைப்புசாரா தொழிலாளர் நல திட்டம் ஏதும் இல்லை. விவசாயிகள் முன்னேற்றத்திற்கான தீர்வு காணாதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் பட்ஜெட் வெறும் அலங்கார அணி வகுப்புகளின் தொகுப்பாகவே உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.