16ம் தேதி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Must read

சென்னை,

மின் வாரிய ஊழியர்களுக்கு 2015ம் ஆண்டு டிசம்பர் 1 தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் 16ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

‘‘12ம் தேதிக்குள் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் திட்டமிட்டப்படி 16ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும். இது காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறும்’’ என்று மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இடைக்கால நிவாரணம் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article