இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

Must read

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று முற்பகல் முடிவடைந்த நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக 16வது சட்டமன்ற கட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜூன் 21ந்தேதி முதல் நடைபெற்றுவந்த நிலையில், இன்று முதல்வர் பதிலுரையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தமிழக கேபினட் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்றதும், கடந்த மாதம் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று 2வது முறையாக நடக்கும் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழகத்திலுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, கொரோனா கட்டுப்பாடு, கொரோனா 3ஆம் அலை குறித்தும், கொள்கைரீதியான முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவது குறித்தும்  விவாதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தின் நிதிநிலை குறித்தும், இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் இழப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளது பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

Latest article