சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை…

Must read

சென்னை: சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால்,

சேலம் மாவட்ட  மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன்,

சிவகங்கை மாவட்ட புரட்சி தலைவி பேரவை இணைச்செயலாளர் சரவணன்,

மகளிர் அணி இணை செயலாளர் சண்முக பிரியா

திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர் ராஜகோபால்,

தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி  இணை செயலாளர் சுந்தர்ராஜ்

ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article