சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அதிக அளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், சிறப்பு ரயில்களின் சேவைகளும், மெட்ரோ ரயில்களின் சேவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுவரை அத்தியாவசிய மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயிவ்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்சேவை தொடங்குகிறது. இதில், பொதுமக்கள் பயணிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் , 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் எனவும்,

ஆண்கள் Non Peak hoursல்  மட்டும் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் 

காலை 9:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரவு 7:30 மணி முதல் கடைசி ரயில் செல்லும் வரை ஆண்கள் பயணிக்கலாம் 

மத்திய, மாநில அரசு பணியாளர்கள் அனைவரும் உரிய அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும்

 ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணியாமல் சிக்கினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.