சென்னை: தமிழக சட்டப்பேரவை  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்து வருகிறார். இதையடுத்து தமிழக 16வது  சட்டமன்றத்தின் கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது.  கடந்த 2 நாட்களாக  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து  விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

3வது நாள் அமர்வான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது, ‘இல்லை’ என்ற சொல்லே இல்லாமல் ஆக்கி இருக்கிறோம் என்றும், நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் தற்போதைய ஆட்சி என்று கூறியதுடன், திமுக அடக்க முடியாத யானை என்றும்,  ‘யானையின் 4 கால்களைப் போல் சமூகநீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமைதான் திமுகவின் பலம்’ என கூறினார்.

முதல்வர் பதிலுரையைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.