சென்னை: ‘டெல்டா பிளஸ் கொரோனா”  வைரசால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரிய கருப்பண் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த  நிலையில், தொடர் சிகிச்சை பிறகு அந்த செவிலியர் நலம் பெற்று பணிக்கு திரும்பி உள்ளார். அவருடன்  தொடர்பில் இருந்தவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ்  ரிசல்ட் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.