தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மார்ச் 26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

“கடந்த ஜனவரி 23ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை வரும் 26.3.2023ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் நடத்தலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். மார்ச் 26-ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.