தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் நேற்று காலமானார்.

ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்.

தவிர, ‘வெற்றிவிழா’, ‘பிரம்மா’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

இவரது மறைவுக்கு தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.