தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியிட்ட பாஜக ஊடகம் மீது கடுமையான நடவடிக்கை: ராவத்

Must read

டில்லி:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்  இன்று அறிவித்தார். அதன்படி கர்நாடகாவில் அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், 15ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்கள்.  கர்நாடக தேர்தல் தேதி பாஜக ஊடகங்களில் வெளியானது குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்திய தேர்தல் ஆணையம்  இதுவரை தேர்தல் தேதியை அறிவிக்காத நிலையில், பாஜக ஆதரவு செய்தி நிறுவனங்கள்  12ந்தேதி கர்நாடக சட்டமன்ற  தேர்தல் நடைபெறும் என செய்தி வெளியிட்டது குறித்தும், அவர்களுக்கு தேர்தல் தேதியை தெரிவித்தது யார், அவர்கள் மட்டும் செய்தி வெளியிட்டது எப்படி என்று சரமாரியாக  கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராவத், பாஜக ஊடக தகவல் பிரிவு செய்தி வெளியிட்டது குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேர்தல் தேதி குறித்த  தகவல் எப்படி வெளியானது  என்பது குறித்து ஆய்வு செய்து, இனிமேல் இதுபோன்று தவறுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின்   காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கேள்விக்கு, காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறுக்கிட மாட்டோம் என்றும், காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்ப தற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றும், அதற்கும் தடையில்லை என்றும் கூறினார்.

More articles

Latest article