டில்லி:

ணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும்போது, 3வது நபர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து சட்ட விரோதம் என்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சக்தி வாகினி என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஆணவக் கொலைகளை தடுக்க கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தது.  அது தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் கணவன் மனைவிக்கு இடையே கட்டப் பஞ்சாயத்து செய்வதும் ஆணவ கொலைகளும் அதிகமாக அரங்கேறுகின்றன என்றும்,  கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் ஆணவக்கொலைக்கு வழிவகுக்கிறது.அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான கட்டப்பஞ்சாயத்தை தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், திருமணம் செய்தவர்களை கட்டப்பஞ்சாயத்து செய்து பிரித்து வைப்பது சட்ட விரோதம் என்றும்,  திருமண வயதை எட்டிய இருவர் மணம் முடித்தால் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கணவன் மனைவிக்கு இடையே  உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து அதைத்தடுக்க மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும், எனவே,  கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.