மகளிர் கிரிக்கெட் : 2021 ம் ஆண்டு ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு

Must read

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஸ்ம்ரிதி மந்தனா 2021 ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 22 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 855 ரன்களை எடுத்த மந்தனாவின் சராசரி 38.86 இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் அடங்கும்.

ஏற்கனவே 2018 ம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் சர்வதேச வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி.யின் 2021 ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் ஸ்ம்ரிதி மந்தனா தவிர இங்கிலாந்தின் பியூமான்ட், தென் ஆப்பிரிக்காவின் லிஸ்லி லீ மற்றும் அயர்லாந்தின் கேபி லீவிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

2007 ம் ஆண்டு இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி ஐ.சி.சி. யின் ஆண்டு விருதை பெற்றதை அடுத்து ஒரு ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய மகளிர் அணி வீரர் தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறை.

More articles

Latest article