சென்னை

மிழகத்தில் பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.29-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.  ஆனால் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மே 26-ஆம் தேதி அறிவித்தார்.

வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை மேலும் தள்ளிவைக்குமாறு பெற்றோர், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு. இதையேற்ற, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறப்பு 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.  எனவே வரும் 2023-24-ம் கல்வி ஆண்டில்6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நாளை 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் உட்பட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று சென்னையில்செய்தியாளர்களிடம்பள்ளிக்கல்விஅமைச்சர்அன்பில்மகேஷ்,

”கோடையின் தாக்கம் அதிகம் இருந்ததால், மாணவர்கள் நலன் கருதி கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால், ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது ஆகவே, பாடங்களை நடத்த ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.”

எனத் தெரிவித்துள்ளார்.