சென்னை

ன்றும் 386ஆம் நாளாகச் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.

எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேசச் சந்தையில் கச்ச எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு  மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என அறிவித்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  ஆனால் இதுவரை பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது.

சென்னையில் தொடர்ந்து 386-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.