சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்துகள் காலாவதியாகி வீணடிக்கப் பட்டுள்ளது. கொரோனா 2வது அலை தாக்கத்தின்போது,  வாங்கப்பட்ட  ரெம்டெசிவர் என்ற கொரோனா  தடுப்பு மருந்துகளில்,  6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி விணானதாக ஆர்டிஐ  மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. மேலும் போலியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அப்போதைய அதிமுகஅரசு ரெம்டெசிவர் மருந்துகளை அதிக அளவில் கொள்முதல் செய்து, அரசு மருத்துவமனைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழக சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா காலத்தில் வாங்கிய ரெம்டிசிவிர் மருந்து விபரங்களை ஆர்.டி.ஐ தகவல் மூலமாக தெரிய வந்துள்ளது.  அதில் கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி,   கடந்த அதிமுக ஆட்சியின்போது,  2020 ஜூன் முதல் 2021 மே மாதம் வரை மொத்தம் 220 கோடி ரூபாய்க்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில்,  32 முறை ரெம்டிசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில்,  25,715 ரெம்டெசிவிர் மருத்து குப்பிகளின் பயன்படுத்துவதற்குள் காலாவதியானதால், அது வீணானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலாவதியான ரெம்டெசிவர் மருந்தின் மதிப்பு ரூ. 6 கோடியே 29 லட்சம் ரூபாய்  என்றும், கொரோனா உச்சத்தில் இருந்தால், பல கொரோனா தடுப்பு மருந்துகள்,  ஒப்பந்தப்புள்ளி கோராமல் அவசரத்திற்காக வாங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்த காலக்கட்டத்தில், கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்து, ஹெப்படிட்டிஸ்-சி வைரஸ் தாக்குதலை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு எபோலா வைரஸ் தாக்கியபோது இந்த மருந்து அளிக்கப்பட்டது. இதைத்தான் ஆரம்பகாலத்தில், கோவிட் – 19 நோய் தாக்குதலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த மருந்து காரணமாக சைடு எபெக்ட் எனப்படும் தீங்குகள் அதிகம் உருவாகும் என்பதால், இதை பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதையடுத்து, இந்த மருந்து பயன்பாடு தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை, 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவிப்பு…