சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பபாடு ஏற்பட்டுள்ளதால்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மருத்துவர் சீட்டுடன் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்றும், 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாகிளுக்கு  ரெம்டெசிவிர்’, ‘ஆக்டெம்ரா’ ‘மருந்துகள்  பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பல மருத்துவமனைகளும் துணை போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து,  ரெம்டெசிவிர்’, ‘ஆக்டெம்ரா’ போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி,  தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு விற்பனை மையம் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
மேலும், ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருந்து தேவைப்படுவோர்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய (+ve) சான்றிதழ், மருத்துவர் பரிந்துரைக்கும் சீட்டு, நோயாளிகளின் ஆதார் கார்டு மற்றும் நோயாளிகளின் ஸ்கேன் ரிப்போர்ட், வாங்க வருபவர்களின் ஆதார் கார்டு கட்டிப்பாக வேண்டும்.
ஒரு ‘ரெம்டெசிவிர்’ குப்பியின் விலை ரூ.1,545 ஆகும். அந்தவகையில் ஒரு நோயாளிக்கு 6 ‘ரெம்டெசிவிர்’ குப்பிகள் வழங்கப்படுகிறது. மேலும் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு மருந்து விவரங்களை கேட்டு பெறலாம். தேவையின்றி மருந்து பெற யாரும் வர வேண்டாம்.