சென்னை:  தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் தேதியை 3வது முறையாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  பொங்கல் பரிசில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான டோக்கன்  வழங்கும் தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 வழங்கு வதை முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஜனவரி 5ம் தேதி மாற்றப்பட்டு தற்போது ஜனவரி 9ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறுவைடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு,   பச்சரிசி உடன் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  பொங்கல்  பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

முதலில் கரும்பு இந்த தொகுப்பில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், முதலில் 27ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 30ந்தேதி முதல் 5 நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, பொங்கல் தொகுப்பில், ப  முழு கரும்பை சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளதால், டோக்கன் வழங்கும் பணி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,   டோக்கன் விநியோகம்  ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை வீடுவீடாக விநியோகிக்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 வழங்குவதை முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஜனவரி 5ம் தேதி மாற்றப்பட்டு தற்போது ஜனவரி 9ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.