2,000 ரூபாய் நோட்டுக்கள் மாயமானதால் பண தட்டுப்பாடு….பாஜக நிதி அமைச்சர்

போபால்:

பண பற்றாகுறை காரணமாக பல மாநிலங்களில் ஏ.டி.எம்.கள் காலியாக உள்ளன. மேலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக நிதியமைச்சர் ஜெயந்த் குமார் மல்லையா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பண பற்றாகுறை என்பது மாநிலத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ளது. ரூ. 7 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மாயமானது தான் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்பது உண்மை’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கானும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். அவரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து மாயமாகிவிட்டது. அவை எங்கே சென்றுள்ளது? என்று நேற்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2000 ரூபாய் நோட்டுக்கள் மாயமானதால் பண தட்டுப்பாடு....பாஜக நிதி அமைச்சர், Rs 2000 which amounts to a currency of 7 lakh crore have gone out is the reason for cash crunch says Jayant Kumar Malaiya MP Finance Minister
-=-