மருத்துவர்கள் அனுமதித்த பின்னரே மனோகர் பாரிக்கர் நாடு திரும்புவார்….பாஜக

பனாஜி:

கணைய நோய் காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அனுமதி அளித்த பின்னரே அவர் நாடு திரும்புவார் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இத குறுத்து பாஜக கோவா மாநில தலைவர் நிலேஷ் கேப்ரல் கூறுகையில்,‘‘அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மனோகர் பாரிக்கர் குணமடைந்து வருகிறார். எனினும் மருத்துவர்கள் அனுமதி அளித்த பின்னரே அவர் நாடு திரும்புவார்.

அவரது உடல் நிலை குறித்து முதல்வர் அலுவலகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் நான் முதல்வரிடம் 7 முறை பேசினேன். அவர் போனில் பேசினார். அதனால் அவர் குணமடைந்து வருகிறார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்’’ என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Manohar Parrikar doing well but will return after medical advice says BJP, மருத்துவர்கள் அனுமதித்த பின்னரே மனோகர் பாரிக்கர் நாடு திரும்புவார்....பாஜக
-=-