வங்கி அமைப்பையே மோடி அழித்துவிட்டார்…..ராகுல்காந்தி குற்றச்சாட்டு

லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பண பற்றாகுறை காரணமாக ஏடிஎம்கள் காலியாக இருப்பது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியே இதற்கு முழு பொறுப்பு. அவர் வங்கிகளின் அமைப்பையே அழித்தது தான் இதற்கு காரணம். நிரவ் மோடி ரூ. 30 ஆயிரம் கோடியுடன் ஓடிவிட்டார். இதற்கு மோடியிடம் இருந்து பதில் வரவில்லை. நம்மை வரிசையில் நிறுத்தினார்கள். நமது பையில் இருந்து 500, 1,000 ரூபாய்களை பறித்து நிரவ் மோடியின் பையில் போட்டுவிட்டார்கள்,”என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் மிகப்பெரிய 15 தொழில் அதிபர்களின் ரூ. 2.5 லட்சம் கடனை தள்ளுபடி செய்து பிரதமர் மோடி வங்கி அமைப்பை அழித்துவிட்டடார். இதன் காரணமாகவே வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை. மோடி அரசின் கொள்கை பணக்காரர்களுக்கானது. ஏழைகளுக்கு இல்லை. அதனால் தான் ஏழைகள், விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்’’ என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Modi has destroyed the banking system says Rahul Gandhi, வங்கி அமைப்பையே மோடி அழித்துவிட்டார்.....ராகுல்காந்தி குற்றச்சாட்டு
-=-