டில்லி அரசின் ஆலோசகர்கள் நீக்கம்….கவர்னர் மீண்டும் அதிரடி

டில்லி:

டில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவின் 2 ஆலோசகர்களை கவர்னர் அனில் பைஜால் நீக்கியுள்ளார். கல்வி மற்றும் மீடியா தொடர்பு ஆலோசகர்களாக 2 பேரை சிசோடியா நியமித்தார்.

இந்த நியமனத்துக்கு உள்துறை ஒப்புதல் பெறப்படவில்லை. அதனால் 2 பேரையும் நீக்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 ஆலோசகர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டில்லி ஆம்ஆத்மி அரசுக்கும் கவர்னருக்கும் இடையே பல்வேறு மோதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய இந்த நடவடிக்கை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் இந்த நடவடிக்கை குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: delhi government's advisors have been dismissed by the governor, டில்லி அரசின் ஆலோசகர்கள் நீக்கம்....கவர்னர் மீண்டும் அதிரடி
-=-