திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 7 பேரை திடீரென கைது செய்த போலீசார் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

போலீசாரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறி இவர்கள் மீது காவல்துறை குற்றம்சாட்டி உள்ளது.

இதனைத்தொடர்ந்து தங்கள் விவசாய நிலங்களை இழந்து போராடிவரும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தோழமைக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்யாறு விவசாயிகளை போராடுமாறு வெளியே இருந்து வந்த நபர்கள் தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கு தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிலங்களை கையப்படுத்தவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

சிப்காட்-டிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி மேல்மா கூட்ரோட்டில் காத்திருப்பு போராட்டம்…