‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ரஜினி உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் ப்ரோமோ செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் தானே வந்து போட்டியில் குதித்த படங்கள் எல்லாம் உள்ளூரில் கூட விலைபோகாத நிலையில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ கடல் கடந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

இங்கிலாந்தில் 10 கோடி ரூபாயும், அமெரிக்காவில் ஐந்து நாட்களில் ரூ. 36 கோடியும் வசூலாகி இருக்கிறது.

திரைகடல் தாண்டி திரவியம் தேடித் தரும் ‘பொன்னியின் செல்வன்’ தமிழகத்தில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் மொத்தம் சுமார் 250 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.