பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜ சோழன் குறித்த ஆய்வுகள் பொதுவெளியில் பரவலாக நடைபெற்று வருகிறது.

திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் அதுகுறித்த சர்ச்சையை ஏற்படுத்துவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “ராஜராஜ சோழன் இந்து அல்ல” என்று ஒற்றைவரியில் கூறிய கருத்து பலவிதங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

அவர் இந்து இல்லையென்றால் இஸ்லாமியரா ? என்று நக்கலடிக்கும் வேளையில் தொடங்கி பேனை பெருமாளாக்கும் வேலையை மதவாத அமைப்புகளும் அதை தாங்கிப் பிடிக்கும் கட்சிகளும் கச்சிதமாக செய்து வருகிறது.

ராஜராஜ சோழன் இந்து அல்ல என்று கூறப்படுவது குறித்து நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “இந்து என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வைத்தது. ராஜராஜ சோழன் காலத்தில் சைவம், வைணவம், சமணம் என்று தான் குறிப்பிடப்பட்டதே தவிர இந்து என்ற சொல்லே அப்போது இல்லை” என்று கூறினார்.