லுவா

டிகை பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் திலிப் வீட்டில் பல மணி நேரம் காவல்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.

கேரள நடிகையைப் பலாத்காரம் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  திலிப்பின் நண்பரும் இயக்குநருமான பாலசந்திர குமார் தெரிவித்த சில தகவல்கள் திலிப்புக்கு எதிராக இருந்ததால் வழக்கு பரபரப்பாகி உள்ளது.  இந்த வழக்கை விசாரிக்கும் டி எஸ் பி பைஜு பவுலோஸ் உள்ளிட்டோரை   கொல்ல திட்டம் தீட்டியதாக திலிப் மற்றும் அவர் தம்பி அனூப் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நடிகர் திலிப்பை இன்றுவரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  நேற்று காலை 11 மணிக்கு  ஆலுவாவில் உள்ள திலிப் விட்டுக்கு  கொச்சி குற்றப்பிரிவு சூப்பிரண்ட் மோகன சந்திரன் தலைமையில் காவல்துறையினர் சென்று சோதனை தொடங்கி உள்ளனர்.   அத்துடன் கொச்சியில் உள்ள திலிப் தம்பி அனூப் வீட்டிலும் சோதனை நடந்தது.

பகல் 12 மணிக்கு திலிப் பட நிறுவன அலுவலகத்தில் சோதனை தொடங்கியது.  இந்த சோதனை இரவு நீண்ட நேரம் ஆகியும் தொடர்ந்து    திலிப் ஒரு கைத்துப்பாக்கி வைத்துள்ளதாக பாலசந்திர குமார் கூறி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  திலிப் க்கு துப்பாக்கி லைசன்ஸ் வழங்கப்படாததால் அந்த துப்பாக்கியைக் கைப்பற்றச் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.  துப்பாக்கி கைப்பற்றப்பட்டதா என்னும் விவரம் வெளியாகவில்லை.