புதுடெல்லி:
ப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று  அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று  அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தூரங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், என்றும், வெளிநாட்டினர் அச்சப்படத் தேவையில்லை என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், பெண்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.