எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஆச்சரியமளிக்கிறது- ப.சிதம்பரம்

Must read

புதுடெல்லி: 
ண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வியக்க வைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக ரூ.1.44 லட்சம் கோடிக்குக் கடன் பத்திரங்களை வெளியிட்டது. இதுபோன்ற சாமர்த்தியமான நடவடிக்கைகளைத் தான் எடுக்க விரும்பவில்லை என்றும், அப்போது வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கு வட்டி வழங்க வேண்டிய சுமை பாஜக அரசின் தலையில் விழுந்துள்ளதால்தான் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நிவாரணம் அளிக்கும் வகையில் எண்ணெய் பத்திரங்களுக்கு வழங்கியதாக  நிதியமைச்சரின் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
சிறந்த அறிக்கை நம்பமுடியாத அறியாமை; மிக மோசமான நிலையில் அது வீரியம் மிக்க தூண்டுதலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எரிபொருள் மீதான அதிகப்படியான வரி மற்றும் செஸ் மூலம் பல மடங்கு லாபம் ஈட்டியதால், எரிபொருள் மானியம் குறித்து கருத்து தெரிவிக்க மோடி தலைமையிலான அரசுக்கு உரிமை இல்லை. இந்த அரசு அடக்குமுறை வரி மற்றும் செஸ் மூலம் நசுக்குகிறது என்று மக்களுக்குத் தெரியும் என்று கடுமையாகச் சாட்டியுள்ளார்.

More articles

Latest article