அரவக்குறிச்சி,
விஜபி தொகுதியான அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர், நடிகைகள் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
வேட்பாளர்களின்  தீவிர பிரசாரத்தால் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது.  அவர்களுக்கு ஆதரவாக  நடிகர்- நடிகைகளும் தொகுதியில் களமிறங்கி உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
premalatha
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின்போது,  கடந்த தேர்தலில் தமது கட்சிக்கு, மக்கள்  வாக்களிக்கவில்லை என்ற கோபத்தில்,  மக்களை முட்டாள்கள் என்று விமர்சித்தார். அது  மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்த பிரேமலதா,
அரவக்குறிச்சி பிரசாரத்தில் தமிழக மக்களை முட்டாள் என்று பேசியது எனது வேதனையின் வெளிப்பாடு என்றார்.
மேலும்,  மக்கள் நலக்கூட்டணியிடம் ஆதரவு கேட்பது சுயநலம். அவர்களாகவே ஆதரவு தரவேண்டும் என்றும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா அந்த பேட்டியில் கூறி உள்ளார்.