சென்னை,
சென்னை வியாசர்பாடியில் நேற்று தினமலர் பத்திரிகையாளர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் தினமலர் நாளிதழின் செய்தியாளர் மீது வியாசர்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று தாக்குதல் நடத்தி, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து உள்ளனர்.
அவரின் பைக்கில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்ரையும் கிழித்து அவமானப்படுத்தி உள்ளனர்.
போலீசாரின் தாக்குதலில் காயம் அடைந்த சதாசிவம் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
reporter1
அரசு மருத்துவமனையில் பத்திரிகையாளர் சதாசிவம்
இதுகுறித்து, தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து உள்ளன.
மேலும் பத்திரிகையாளர் சதாசிவத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காவல் ஆய்வாளரை சந்திக்க திட்டமிட்டு காவல் ஆய்வாளர் அலுவலகம் வந்தனர்.
 
தினமலர் நிரூபர் சதாவை தாக்கியதற்காக, காவல் ஆய்வாளரை சந்தித்து மனு அளிக்க வந்த பொழுது அனுமதி மறுக்கப்பட்டதால் பத்திரிக்கையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
reporters