சென்னை,
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது சம்பந்தமாக திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் இறந்துபோனதால், அந்த தொகுதி காலியானது.
காலியாக இருந்த 3 தொகுதிக்களுக்கும்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதம் 19ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
lakkani
3 தொகுதி தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த, இந்திய துணை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா, வருவாய் இயக்குனர் திலிப் சர்மா ஆகியோர் நாளை தமிழகம் வருகிறார்கள்.
அவர்களுடன் நானும் சென்று தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு சென்று,  அங்குள்ள தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறோம் என்றார்.
மேலும், இன்னும் இரண்டு நாளில்,  இமாசலத்தை சேர்ந்தகாவல் துறை அதிகாரி சஞ்சீவ் ரஜ் சன்ஓசா வருகை தந்து தேர்தல் பணிகளை பார்வையிடுகிறார் என்று கூறினார்.
திருப்பரம்குன்றம் தொகுயில் ஆரத்தி எடுக்கும் போது ஆஸ்டின் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது சம்ந்தமாக திமுக மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.