சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று நடைபெற்று வரும் சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார்.

சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கிக்கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் சிபிஐ வழங்கு பதிவு செய்துள்ளது. அதுதொடர்பாக இன்று காலை முதல், சென்னை, டெல்லி, மும்பை, பஞ்சாப், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், இன்று காலை முதல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு இதுவரை எந்தவித ஆவணமும் கிடைக்கவில்லை  சிபிஐ தரப்பில் காண்பிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை.. இந்த சோதனை நடத்தப்படும் தருணம் சுவராஸ்யமானது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

முறைகேடான முறையில் சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு…