டில்லி

தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் என்னும் சவால் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூக வலை தளங்களில் ஒவ்வொரு சவால்கள் வைரலாகிறது. இந்த சவாலை பலரும் செய்து அந்த வீடியோவை பதிவிடுவதும் வழக்கமாகிறது. இதில் மோமோ சேலஞ்ச், கிகி சேனஞ்ச், வாக்குவம் சேலஞ்ச் போன்றவை பெரிதும் புகழ் பெற்று விளங்கின.

தற்போதைய நிலையில் பாட்டில் கேப் சேலஞ்ச் என்னும் பாட்டில் மூடி சவால் பிரபலமாகி  வருகிறது. இந்த சவாலில் ஒருவர் ஒரு பாட்டிலை இறுக்கமாக பிடித்திருக்க வேண்டும். சவாலை ஏற்றுக் கொள்பவர் அந்த பாட்டிலின் மூடியில் ஒரு உதை விட்டு அந்த மூடியை திறக்க வேண்டும். இதுவே சவாலாகும்.

[youtube https://www.youtube.com/watch?v=dkt1zRCVjvc]

இந்த சவாலை ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் கோலிவுட் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் செய்து முடித்துள்ளனர். இந்த விடியோக்கள் வைரலாகிறது. இந்த சவாலை செய்பவர் தவறுதலாக பாட்டிலை உடைப்பது, எதிரே உள்ளவரை உதைப்பது போன்றவைகளும் நடைபெறுவதும் உண்டு.