பூரி:

லகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை லட்சக்கணக்கான மக்களுடன் இன்று கோலாகலமாக  தொடங்கியது.

ஒடிசா மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் திருவிழாவின்போது, ரத யாத்திரை  செல்வது வழக்கம். அதன்படி, இன்று லட்சக்கணக் கான மக்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுக்க யாத்திரை தொடங்கியது. இந்த திருவிழா வைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்த திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பூரி ஜெகநாதர் திருவிழாவில் , 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு , மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும் , 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு , பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு , கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வார்கள் . குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக , வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார் . அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும் .

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது .

இந்த ஆண்டுக்கான 9 நாட்கள் ரத யாத்திரை கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி தொடங்கியது . ஜெகந்நாதர் , அவரது சகோதரர் பாலபத்திரர் , சகோதரி சுபத்திரா ஆகியோர் வெவ்வேறு ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் .

9 நாட்கள் நடைபெற்ற இந்த ரத யாத்திரை நேற்று நிறைவடைந்தது . ஊர்வலம் முடிந்து ரதங்கள் கோயிலை வந்தடைந்தன . இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூரி திவ்யா சிங்கா தேபின் கஜபதி ராஜா சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் . தொடர்ந்து ரதங்கள் நிற்கும் இடத்தை தங்க துடைப்பத்தால் சுத்தப்படுத்திய பின் மலர்கள் தூவப்பட்டு , வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது .

அதைத்தொடர்ந்து,  ரதங்களை  ஆயிரக்கணக்கான மக்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். மூன்று தேரும் அழகாக அசைந்து தெருக்களில் வலம் வந்தனர்.

ஜெகந்நாதர் தேர் திருவிழாவின் பாதுகாப்புக்காக 142 பட்டாளியன் போலீஸார், 2 கம்பெனி அதிரடிப்படையினர், 3 யூனிட் ஒடிசா ஆயுதப்படை போலீஸார், தேசியப் பேரிடர் மீட்பு அமைப்பி னர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ரதயாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மரத்தால் தேர் செய்யப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் அந்த தேர் கலைக்கப்படும்.

இந்த மூன்று தேர்களுக்கு தாலத்வாஜா, தேபேத்லன், நந்திகோஷா என்று பெயரிடப்பட்டிருக்கும்/ ஒவ்வொரு தேரும் ஏற்குறைய 14 அடி நீளம்வரை இருக்கும். தேர் தெருக்களில் நகர்ந்து வரும் போது, மக்கள் மேள தாளங்களை இசைத்தும், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இதுபோல ஜெகந்நாதர் கோயில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருக்கிறது அந்த கோயிலுக்கு இன்று காலை சென்ற பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சிறப்பு வழிபாடு நடத்தினார்.