போதைபொருள் விவகாரம்: சென்னை கேளம்பாக்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

Must read

சென்னை: போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள ஒருவர்  வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. பலகோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடைபெற்று விசாரணையில், தமிழக நபர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோப்புப் படம்

கடந்த 2021ஆம் ஆண்டு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் துறைமுக கடற்கரையில் இலங்கை படகில் இருந்து 300 கிலோ ஹெராயின், 5 ஏகே047 துப்பாக்கிகள் மற்றும் 1,000 உயிருள்ள 9 எம்எம் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் என்ஐஏ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. . அதன்படி,  தனுகா ரோஷன், குணசேகரன், பூக்குட்டி கண்ணன், விக்ரமசிங்கம், கட்ட காமினி, சுரங்க பிரதீப், ரூபான், முகமது ரியாஸ், கென்னடி மற்றும் உமா ராமன் உட்பட 14 கைதிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் போதைப்பொருள் கடத்துவதற்காக பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத சப்ளையர் ஹாஜி சலீமுடன் இந்த கும்பல் செயல்பட்டு வந்தது. இந்த கடத்தல்காரர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் செயல்பட்டு, விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர்” என்றுகூறப்பட்டது.  புலிகளின் மறுமலர்ச்சிக்காக இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, ஒரு குற்றக் கும்பலாகவும் இந்த கும்பல் செயல்பட்டு வந்தது. இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, சட்டவிரோத செயல்களைச் செய்ய அழைப்பு விடுத்து வருகின்றனர். முகாமிற்குள் அமர்ந்திருந்த கும்பல், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள இடங்களுக்கு தங்கள் போதைப்பொருள் அனுப்பப்பட்டதை உறுதிசெய்தது மட்டுமல்லாமல், பிற நாடுகளில் கொலை மற்றும் கடத்தல்களிலும் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, திருச்சி சென்னை உள்பட பல இடங்களில் கடந்த ஜூலை மாதம் 20ந்தேதி 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவரைத் தங்கவைக்கும் முகாமிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  இந்த முகாமில், இலங்கையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உட்பட 140க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர்,  முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும், முகாமிற்குள் 18 கிலோ கேக்கை வெட்டி, ஒருவரின் பிறந்தநாளை கைதிகள் கொண்டாடிய வீடியோக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கசிந்தன. இதை தமிழகஅரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அவர்களிடம் இருந்து,  60 க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும்  மடிக்கணினி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. முகாமை சரியான முறையில் கண்காணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த சோதனையைத் தொடர்ந்து,  முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழித்தடம் ஒருவரின் வீடு சோதனையிடப் பட்டது. முந்தைய தேடுதல் நடவடிக்கையின் போது அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, இன்று திருச்சி சிறப்பு முகாமில் கேரளாவைச் சேர்ந்த நபருக்க்கு நெருக்கமான ஒருவர், சென்னையை அடுத்த கேளம்பாக்கம் தையூரில் தங்கியிருப்பது தெரிய வந்ததது. அவரது விட்டில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article