டில்லி

நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் தேர்வின் மையங்கள் மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள்  கலக்கம் அடைந்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை தற்போது நாடெங்கும் நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகின்றது.     வருடத்துக்கு இரு முறை நடந்த இந்த நீட் தேர்வு தற்போது ஒரு முறை மட்டுமே நடைபெற உள்ளது.   முதலில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு கிராமப்புற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதை ஒட்டி ஆன்லைன் தேர்வு முறை கைவிடப்பட்டது.  இந்த ஆண்டுக்கான தேர்வு நாள மறுநாள் அதாவது மே மாதம் 5 ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.    மாணவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டை ஆன்லைன் மூலம் பெற்று தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்  தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   புது மையக்கள் குறித்த விவரத்துடன் கூடிய தேர்வு நுழைவுச் சீட்டை  மாணவர்கள் இணையத்தில் இருந்து அச்சு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மைய மாற்ற அறிவிப்பு பல மாணவர்களுக்கு கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.    மேலும் புதிய நுழைவுச் சீட்டை அச்சு எடுக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.   ஏற்கனவே உள்ள நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் தவிர மற்ற விவரங்கள் உள்ளதால் அதை  ஏன் ஏற்கக்கூடாது என கேள்விகள் எழுப்புகின்றனர்.

பலரும் இணையத்தில் உள் சென்று பார்த்த போது புதிய நுழைவுச் சீட்டு இல்லாமல் இருந்துள்ளது.     அது மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.