ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்காவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் நேற்று அறிவித்துள்ளனர்.

பீட்டரின் ரசிகர்களும், ஸ்டார் வார்ஸ் படக்குழுவினரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பீட்டரை படத் தயாரிப்பாளர் சார்லஸ் ஷ்னீர் படத்தில் நடிக்க வைத்தார். பீட்டர் முதன் முதலாக சிந்துபாத் அன்ட் தி ஐ ஆப் தி டைகர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் 1977ம் ஆண்டு ரிலீஸான ஸ்டார் வார்ஸ் படத்தில் ஹான் சோலோவின் நண்பராகவும், துணை விமானியாகவும் நடித்து பிரபலமானார்.