சண்டிகர்: ஒலிம்பக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியவீரர் நிரஜ் சோப்ராவுக்கும் ரூ.6 கோடி  பரிசு வழங்கப்படும் என அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்து உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற வீரர் நிரஜ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நிராஜ் சோப்ராவுக்கும் 6 கோடி பரிசுத் தொகையை அரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் எனவும் பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பான மையத்தை நாங்கள் உருவாக்குவோம். அங்கு அவர் விரும்பினால் அவர் தலைவராக இருப்பார் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் பளு தூக்குதலில் மீராபாய் சானுவின் வெள்ளி பதகத்துடன்  இந்தியா பதக்கத்தை தொடங்கியது. இறுதி நாள் நீரஜ் சோப்ராவின் தங்கத்துடன் பிரகாசமாக நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இதுவரை ஒரு தக்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன், ஒலிம்பிக் அரங்கில் 47வது இடத்தை பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…