டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில்  தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இந்தியா சார்பில் 127 வீரர் வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடி வருகின்றனர். தற்போது போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன.

இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கோல்ப் வீரர் உள்பட சிலர் தோல்வியை தழுடிவினர்.

இந்தநிலையில், ஒலிம்பிக்  ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று பிற்பகல் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றிருந்தார்.

அவர் இறுதிச்சுற்றில், 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி  எறிந்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.  ஒலிம்பிக் வரலாற்றில்  தடகளப் போட்டியில் இந்தியா பெற்றுள்ள முதல் தங்கப்பதக்கம் இதுவே. அதனால், இது வரலாற்று சாதனையாகவும் கருதப்படுகிறது.

இன்றைய போட்டியில்வ இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர். முதலில் கொடுக்கப்படும் மூன்று வாய்ப்புகளில் முதல் எட்டு இடங்களைப் பிடிப்பவர்களுக்கு அடுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

அதன்படி, முதல் வாய்பில் , நீரஜ் சோப்ரா  87.03 மீட்டர்  தூரம் வீசி அசத்தினார். இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரத்திற்கு வீசி முன்னிலை பெற்றார். 3வது வாய்ப்பில் 76.79 ஆகவும், 4வது வாய்ப்பு மற்றும் 5வது வாய்ப்பு  ஃபவுல் ஆகவும் போனது. தொடர்ந்து ஆறாவது  வாய்ப்பு – 84.24 மீட்டர் தூரத்திற்கும் வீசினார். அவரது துரத்தை சக வீரர்களால் எட்ட முடியவில்லை. இதனால்,  நீரஜ் சோப்ராவுக்கு தங்கத்தை கைப்பற்றினார்.

இளம் வீரரான நீரஜ் சோப்ரா ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கும், அரியான மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ள நிலையில், தற்போது நிரஜ் சோப்ரா மேலும் பெருமையை சேர்த்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்துள்ள நீரஜ் சோப்ரா ஹரியானா மாநிலம் பானிபட் நகரைச் சேர்ந்தவர்.  அங்குள்ள சண்டிகர் தேவ் கல்லூரியில் படிப்பை முடித்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதார் ஆக 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் 2016 ஆசிய விளையாட்டு போட்டியில் 82.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 85.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இந்தச் சாதனையை 2018ஆம் ஆண்டு தோகா டைமண்ட் லீக் போட்டியில் 87.43 மீட்டர் தூரம் ஈட்டி வீசி முறியடித்தார்.

தற்போது இவர் ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் பார்டோனீட்ஸ் (Klaus Bartonietz) என்பவரிடம் ஈட்டி எறிதல் பயிற்சி பெற்றுவருகிறார். ஈட்டி எறிதலில் இவரின் சாதனை 88.07 மீட்டர் ஆகும். இவர் இதற்கு முன்பு ஏற்படுத்திய சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.

நீரஜ் சோப்ரா கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 2015ல் ஆசியன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2016ல் மீண்டும் இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றதுடன், 2017ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில்85.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்திருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஐஏஎஃப் டைமன்ட் லீக் போட்டியில் வெற்றி பெற்றதுடன், 202ல் நடைற்ற கோர்டேன் ஆசிய போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்தவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் – ரூ.4 கோடி பரிசு: ஒலிம்பிக் வெள்ளி வென்ற மல்யுத்தவீரர் ரவிக்குமார் தாஹியா நன்றி…