வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் NC22 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.

நாகசைதன்யா-வின் 22 வது படமான இதன் டைட்டிலுடன் கூடிய இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ் படமான இதன் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

கோயில் அருகில் மதுபான கடை… வெங்கட்பிரபு படத்தின் செட்டை சூறையாடிய கிராம மக்கள்…