13 வருடங்களாக வாடகை வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்தாத பாஜக முதல்வர்

Must read

போபால்

த்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடந்த 13 வருடங்களாகத் தனது வாடகை வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

மத்தியப் பிரதேச மத்திய பிராந்திய மின் விநியோக நிறுவனம் கடந்த வாரம் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு 1,22,833 ரூபாய் மின் கட்டண பில் வழங்கியது.   மத்தியப் பிரதேச மாநிலம் விடிஷா தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சவுஹான் விடிசாவில் உள்ள ஒரு வீட்டை லீலா பாய் என்பவரிடமிருந்து வாடகைக்கு எடுத்திருந்தார்.  அந்த வீட்டுக்கு 13 வருடமாக மின்கட்டணம் செலுத்தாததால் இந்த பில் வழங்கப்பட்டுள்ளது

மத்தியப் பிரதேச மாநில கல்விஅமைசர்  ஜீது பட்வாரி, ”மின் கட்டணம் செலுத்தாததால் அவரது தேர்தல் படிவம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் :சிவராஜ் சிங் சவுகான் மாநில முதல்வராக இருந்தார்.   இவ்வாறு முதல்வர் பதவியை இழிவுபடுத்தியதால் அவர் வெட்கப்பட வேண்டும்” என செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.

தற்போது சிவராஜ் சிங் சவுகான் மின் விநியோக நிறுவனங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகரித்த மின்சார கட்டணங்கள் குறித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.  அத்துடன் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணங்களை செலுத்த மக்களை தூண்டிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜீது பட்வாரி இது குறித்து, ”சவுகான் ஒரு காலத்தில் தாம் வகித்த அலுவலகத்தின் கண்ணியத்தை குறைத்துள்ளார். அது மட்டுமின்றி அவர் எந்த விலை கொடுத்தாவது ஊடக வெளிச்சத்தில் இருக்க விரும்புவதால் மக்களைத் தூண்டுகிறார். ஆனால் உண்மை என்னவென்றால், மாநில முதல்வராக இருந்தபோது, ​​13 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வாடகைக்கு எடுத்த வீட்டின் மின்சார கட்டணத்தை அவர் செலுத்தவில்லை.  இதற்காக போபாலில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். என்று அவர் உடனடியாக தனது நாடகங்களை நிறுத்த வேண்டும்,”என மேலும் கூறினார்.

More articles

Latest article