சண்டிகர்:

90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் , பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய நிலையில், இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், உபரி கட்சிகளை இழுக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

அரியானா மாநிலத்தில் கடந்த 21ந்தேதி 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மதியம் 12 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,  பாஜக 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 33 இடங்களிலும், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (INLD) 2 இடங்களிலும், மற்றவை 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அங்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பெரும்பான்மை பெறாத நிலையில், உதிரிக்கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை இழுக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதன் காரணமாக அங்கு ஆட்சி அமைக்கப்போது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.