டில்லி

காஷ்மீர் மாநிலத்துக்கு இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது.   இதனால் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகப் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

மாநிலத்தில் தொலை தொடர்பு மற்றும் இணைய சேவை முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.  இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் பரிமாற்ற உரிமை மீறப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

விசாரணையில் உசநிதிமன்றம், “நாட்டு நலன் கருதி சில கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம் ஆனால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் நாட்டுக்கு உள்ளது.  காஷ்மீர் மாநிலத்தில் என்னும் எத்தனை தினங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும்?” என வினா எழுப்பி உள்ளது.