மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பால்தாக்கரே பேரன் ஆதித்ய தாக்கரே வெற்றிமுகம்

Must read

மும்பை:

காராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வொர்லி தொகுதியில் போட்டியிட்ட, சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேவின் பேரனும், தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும்,  சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவருமான ஆதித்ய தாக்கரே முன்னிலை வகித்து வருகிறார். அவர் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ் 147, அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.  பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிட்டன.

ஆட்சியைப் பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி அதிக எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதால், அங்கு மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியே தொடர வாய்ப்பு உள்ளது.

மதியம் 12.30 மணி அளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 

பாஜக + சிவசேனா  கூட்டணி முன்னணி: 167 இடங்கள்

காங்கிரஸ்+ தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முன்னணி :  91 இடங்கள்

மற்றவை: 30 இடங்கள் முன்னணி…..

இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறக்கப்பட்ட தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த பால்தாக்கரேவின் பேரன் ஆத்திய தாக்கரே முன்னிலை வகித்து வருகிறார்..  மும்பை வோர்லி தொகுதியில் முதல் முறையாக களமிற்கக்பபட்டட  இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே  தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 23ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதன் காரணமாக அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.

More articles

Latest article