சென்னை: மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிகளில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, என்றும், தேர்தல் தொடர்பாக இதுவரை 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,  கர்ப்பிணிகள், மாற்றுத்திறநாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும் வகையில், பிக்கப் டிராப் வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார்.

நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதியான நாளை  வாக்குப்பதிவு  நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  மிகவும் பதற்றமானவையாக 181 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 950 வேட்பாளர்களில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள், 76 பேர் பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர்.

மக்களவை தேர்தலையொடிடி, 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலையொடிடி,ட  39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.  மேலும், மாநிலம் முழுவதும் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி மூலம் 4861 புகார்கள் வந்துள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாளை வாக்குப்பதிவினையொட்டி,  1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்களும்,  81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.  அவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் காலை 7மணி முதல் தங்களது வாக்கினை செலுத்தலாம். மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றவர்,  மாலை 6 மணி வரை  வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கும் வகையில் முமையான வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் வாக்களிக்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தவர்,  மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் 1950 என்ற தேர்தல் ஆணைய உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்தால், அவர்கள் வாக்களிக்கும் வகையில், இலவச வாகன வசதி செய்து தரப்படும், அவர்களை அழைத்துவந்து, அவர்கள் வாக்களித்தவுடம் வீட்டில் கொண்டு விடும் வகையில், இலவச வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றார். மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

இவ்வாறு கூறினார்.

நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…

இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும்! வாக்குச்சீட்டு முறை தேர்தல் வழக்கில் நீதிபதி பரபரப்பு தகவல்…