சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிபு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்றுவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையடுத்து, வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் . இந்நிலையில், இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்குள்பட்ட தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி  நேற்று கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில்  நடைபெற்றது.

மேலும், பதற்றமான வாக்குச் சாவடியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் வாக்குச்சாவடிகளில் அந்தந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மலைக்கிராமங்கள் உள்பட பல பகுதிகளுக்கு கால்நடைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், தேர்தல் அலுவலர்களுக்கு சென்றுள்ளனர். ராசிபுரம் பகுதியில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்திற்கு செல்ல இதுவரை சாலை வசதி கிடையாது. சுமார் 7 கி.மீ. தொலைவு ஒற்றையடி பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும்.  இந்த நிலையில், தற்போதைய . மக்களவைத் தேர்தலுக்காக இந்த மலை கிராமங்களில் உள்ள சுமார் 1142 வாக்காளர்களுக்காக, மலை கிராமத்திற்கு கீழூர் கெடமலை ஆகிய இரு கிராமங்களில் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனித்தனியாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு வாக்குபதிவு மையங்களுக்கும் இன்று காலை 7 மணி அளவில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், மை, எழுது பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் செல்லப்பட்டது. பின்னர் வடுகம் அடிவாரத்திலிருந்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மண்டல தேர்தல் அலுவலர், உதவி அலுவலர், வருவாய் உதவியாளர்கள் தலைச்சுமையாக போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒற்றையடிப்பாதையில் எடுத்துச் சென்றனர்.

சுமார் 1200 மீட்டர் உயரம் கொண்ட பாதை வசதி இல்லாத இந்த மலைப் பகுதிக்கு ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஒரு வாக்குபதிவு மையத்திற்கு மண்டல தேர்தல் அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் என 9 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரு வாக்குப்பதிவு மையத்திற்கும் மொத்தம் 18 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.