ரஷ்யா – கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற சைபீரியாவின் டியூமன் பிராந்தியத்தில் ரஷ்யா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைக்கும் என்று துணை பிரதமர் டாடியானா கோலிகோவா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

ஜப்பான் : ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பலில் பயணம் செய்த 3700 பேரின் முதற்கட்ட சோதனை முடிவுகள் வந்த 31 பேரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் : பிரிட்டன் தனது நாட்டு குடிமக்களை சீனாவிலிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் : பிரிட்டனை தொடர்ந்து பிரான்சும் தனது நாட்டு குடிமக்களை சீனாவிலிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

பெல்ஜியம் : கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதித்த மற்றும் ஒரு நாடு பெல்ஜியம், இங்கு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனா : சீனாவின் வுஹான் பகுதியில்  தொழில் முடக்கம், விடுமுறை காரணமாக, போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு, மக்கள் முடங்கிப்போனது மட்டுமல்லாமல். மருத்துவமனைக்கு செல்பவர்களும் நடைப்பயணமாகவோ, சைக்கிளிலோ செல்லவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கென்யா : சீனாவில் வேலை செய்யும் கென்யர்களை தாய்நாடு அழைத்துவருவதில் சிக்கல், வுஹானில் 85 கென்யர்கள் இருக்கும் நிலையில், சீன அரசு உள்நாட்டு போக்குவரத்திற்கு தடைவிதித்து இருப்பதால், அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகள், சீனாவிலிருந்து வரும் சீனர்கள் மற்றும் தங்கள் நாட்டை சேராத வெளிநாட்டினருக்கு விசா வழங்க மறுத்து தடைவிதித்துள்ளது.

Image Courtesy : Moscow Times

மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை தாயகம் அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. தாயகம் திரும்ப வழியில்லாதவர்கள், சீனாவில் தொழில் வர்த்தகம் உள்நாட்டு போக்குவரத்து நிறுத்தம் மற்றும் நீடிக்கப்பட்ட விடுமுறையால்  செய்வதறியாமல் முடங்கியுள்ளனர்.

சொந்த நாட்டிற்கு அழைத்துவருவதிலும், விமானத்தில், கொரோனா வைரஸ் பாதித்த யாரவது ஓரிருவர் இருந்தால் மற்றவர்களுக்கும் பரவுமோ என்ற அச்ச உணர்வும் இவர்களிடம் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் மய்யமாக இருந்தாலும், உலகை பல்வேறு வகையில்  அச்சுறுத்துவதாகவும், இதற்கான மருந்து ஆய்வு நிலையை கடந்து வர ஓராண்டு காலம் ஆகும் என்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும்  உள்ளது.