கொச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தண்டனை அனுபவித்து வரும் கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் போப் பிரான்சிஸ் விடுவித்தார்.

2016ம் ஆண்டு மே மாதம் கோட்டியூர் அருகே நீண்டுனோகியில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிரியார் ராபின் வடக்கன்சேரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

கண்ணூர் மாவட்டம் தலசேரியில் உள்ள போக்ஸோ நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ரூ .3 லட்சம் அபராதமும் விதித்தது. தற்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந் பாலியல் பலாத்காரத்திற்குத் தண்டனை பெற்ற கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வாடிகன் செய்தி குறிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 5ம் தேதியில் இருந்து அவர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார. 2017ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் செய்த குற்றம் குறித்த செய்தி வெளியான உடனேயே அவர் பாதிரியார் கடமைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.