கொல்கத்தா: நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக, மேற்கு வங்கத்தில் 3ல் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். திரிணாமூல் காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குடியுரிமை சட்டம் பற்றி தவறாக பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கூட குடியுரிமையை இழக்கமாட்டார்கள். எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் சிஏஏ குடியுரிமை மட்டுமே அளிக்கிறது.

அதை எடுத்துக் கொள்ளாது என்று நான் உறுதியளிக்கிறேன். இது உங்கள் குடியுரிமையை பாதிக்காது. அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம் என்றார்.